IRCTC-யில் இலகுவாக டிக்கெட் புக் செய்ய

IRCTC-யில் டிக்கெட் புக் செய்ய கீழ்க்கண்ட முன்னேற்பாடுகள் அவசியம்! முன்னதாகவே இந்த ஏற்பாடுகளை செய்து வைத்து விடுங்கள்!

குறைந்த பட்சம் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்! உங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் ஏனைய தகவல்களை சரியாக உள்ளீடு செய்து வையுங்கள்.

"User Profile" பகுதியில் "Master List of Passengers" என்றொரு பிரிவு இருக்கும். அதில் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர், பிறந்த நாள், மற்றும் விருப்பமான பெர்த் போன்ற தகவல்களை உள்ளீடு செய்திடுங்கள்! வயதானவர்களுக்கோ, அல்லது குழந்தையுடன் பயணிக்கப் போகிறவர்களுக்கோ லோயர் பெர்த்தை தேர்ந்தெடுத்து வைப்பது நலம்!தேவை பட்டால் 'Travel List-களையும்' போட்டு வைத்துக்கொள்ளலாம்! உதாரணத்திற்கு "WeTwo" என்றொரு லிஸ்டை உருவாக்கி அதில் மாஸ்டர் லிஸ்டில் ஏற்கனவே உள்ளீடு செய்த உங்கள் பெயரையும், உங்கள் மனைவியின் பெயரையும் போட்டுக்கொள்ளலாம், முன்பதிவு செய்யும் போது இது மிகவும் வசதியாக இருக்கும்.
அதே போல IRCTC-யில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவர் பேரிலும் ஒரு அக்கௌன்ட்டை ஆரம்பித்து விடுங்கள். ஒரே நபர் பல கணக்குகளை துவக்குவது அவர்களின் விதிமுறைக்கு புறம்பானது என்பதால் நாம் இந்த மிகப் பெரிய ஓட்டையை பயன்படுத்தி அவர்களுக்கு பெப்..பெப்...பேபே காட்டலாம்!

உங்கள் கம்பியூட்டரில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பிரௌசர்கள் நிறுவி வைத்திருப்பது மிக அவசியம் (IE, firefox, opera, chrome etc.). ஒரே நேரத்தில் எல்லா பிரௌசர்களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட அக்கௌன்ட்கள் மூலமாக login செய்து முயற்சித்தால் மட்டுமே டிக்கெட் கிட்டும்!

உங்கள் பயணத்திற்கான இரயில் புறப்படும் மற்றும் போய் சேரும் இடங்களின் ஸ்டேஷன் code-களை முதலிலேயே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு MDU - மதுரை ஜங்ஷன், SBC - பெங்களூர் சிட்டி! "Plan My Travel" பகுதியில் madurai என டைப் அடிக்கும் போதே அதற்கான code-ஐ IRCTC தளம் காண்பித்து விடும்!

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடைய ஏதாவது ஒரு அடையாள அட்டை எண்ணை ஒரு டெக்ஸ்ட் ஃபைலில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள், உதாரணத்திற்கு டிரைவிங் லைசென்ஸ்!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"