வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!


அண்டவெளியில் காணப்படும் கோள்கள் அல்லது கிரகங்கள் ஒன்பது என்கின்ற கதை போய் தற்போது வானவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞாகளால் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருகிறது. இதுவரை வானியல் ஆய்வாளர்களால் சுமார் 50 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில் கிட்டத்தட்ட 16 கிரகங்கள் பூமியினை ஒத்ததாகவும் இதன் அளவை விட பெரியதாகவும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் ஒரு கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

இக்கிரகங்கள் பூமியில் இருந்து 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்தக்கண்டுபிடிப்புக்கள் என்றோ ஒரு நான் மனிதர்களை வேற்றுக்கிரகங்களுக்கு அழைத்து சென்று குடியமர்த்த முடியும் என நம்பப்படுகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"