ஆமைகள் எப்போது வயசுக்கு வருது? சுவராஸ்ய தகவல்!!



ஆமைகள் 45 வயதில்தான் வயசுக்கு வருகின்றன. அதற்கு பிறகுதான் முட்டையிட ஆரம்பிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனின் ஸ்வான்சீ பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் கிரேம் ஹேஸ் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆமைகளின் ஆயுள்காலம், அவைகள் முட்டையிடுவது தொடர்பாக தீவிரமாக ஆராயப்பட்டது.

இந்த ஆய்வில் தெரியவந்த தகவல் பற்றி பேராசிரியர் ஹேஸ் கூறியதாவது: ஆமைகள் பெரும்பாலும் 150 ஆண்டு முதல் 200 ஆண்டு வரை உயிர் வாழும். 250 ஆண்டு உயிர் வாழ்ந்த ஆமைகள்கூட இருக்கின்றன.

அதிக ஆயுள்காலம் கொண்ட ஆமைகளின் உடல் அமைப்பு, 45 வயதில்தான் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக மாறுகிறது. அதாவது, சராசரியாக 45 வயதில்தான் ஆமைகள் பூப்படைகின்றன. அதற்கு பிறகுதான் முட்டையிட ஆரம்பிக்கின்றன.இவ்வாறு ஹேஸ் கூறியுள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"