நல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவைகள்


  • சுபம் செய்யும் அன்றைய நாள் கரிநாளாக இருக்கக்கூடாது.
  • திதியில் அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • யோகம் மரணயோக வேளையாக இல்லாமல் சித்த, அமிர்த யோகமாக இருக்கவேண்டும்.
  • ஓரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஓரை இல்லாமல் பிற ஓரைகள் வரவேண்டும்.
  • பஞ்சகங்களில் பொதுவாக அக்கினிஸ சோர, ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

முக்கியமாகக் கீழ்க்கண்ட பஞ்சகங்களில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை

அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள்
திருமணம், சீமந்தம், புதுமனை கோல, குடிபோக.

மிருத்யு பஞ்சகம்
பங்குத் தொழில், லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்கக் கூடாது.

அக்னி பஞ்சகம்
பஞ்சு, பெட்ரோல் பொருள்கள், நூல், துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்கக்கூடாது.

இராஜ பஞ்சகம்
அரசு வங்கி மற்றும் பொது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி நடத்தும் தொழில் தொடங்கக் கூடாது.
  • நிஷ் பஞ்சகங்கள் மிக்க சுபம்.
  • இராகு காலம், எமகண்டம் நேரங்கள் இருக்கக் கூடாது.
  • கெளரி பஞ்சாங்கத்தில் ரோக, சோர விஷ காலங்கள் இருக்கக் கூடாது.
  • முக்கியமாக அந்த நட்சத்திரக்காரருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டிர தினமாக இருக்கக்கூடாது.
மேற்கண்டவற்றை அந்தந்த தேதி மற்றும் ஊர்களின் உதய நேரத்தை அனுசரித்து கணித்துக் கொள்ளவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"